Sunday, October 9, 2016

Sakalakalaavalli Maalai by Kumara Guruparar

          
Image result for saraswathi

               Hey guys. Happy Navarathri to all of you! On this auspicious Saraswathi Pooja day, I'm posting Sakalakalaavalli Maalai composed by Sri Kumara Guruparar. The background of this beautiful Tamil song is like this. About 200 years back, Kasi Viswanatha temple in Varanasi was locked out by the then Islamic rulers of India. Kumara Guruparar wanted to reopen this temple and establish a Mutt. But, when he spoke to the Islamic rulers about this, they insulted him and said that he couldn't speak a single word in Arabic and how come he came to ask for favors. Sri Kumara Guruparar composed this beautiful songs and praised Saraswathi, the goddess of speech and knowledge, and prayed for versatility in multiple languages. Goddess Saraswathi was very happy with his songs and bestowed him the full knowledge of Arabic and Hindustani language instantaneously. The very next day, Kumara Guruparar went to the ruler again and spoke in pure Arabic and asked them to reopen the temple and also grant him some land for establishing a Mutt. Impressed and surprised over his knowledge of Arabic language overnight, the Islamic rulers granted his wishes. If we also chant these songs, Goddess Saraswathi will certainly grant us the same boon such as mastery over speech and language.



சகலகலாவல்லி மாலை பிறந்த கதை 
காசி-விசுவநாதர்கோயில் இஸ்லாமியரால் பூட்டப்பட்டு அக்கோயிலின் மிக அருகில் ஞான்வாபி மசூதி என எழுப்பி பூஜைகள் நின்றன.
தென்னகத்திலிரூந்து மக்கள் காசி-விசுவநாதரை வழிபட்டு கங்கை நீரை கொணர்ந்து ராமேஸ்வரம் கோயிலில் அபிஷேகம் செய்வது மிக முக்கியமானது. காசி-விசுவநாதரை வழிபட முடியாமல் மக்கள் வருந்திய போது - தமிழகத்திலிருந்து சென்ற குமரகுருபரர் மிக வருந்தி ஒரு துபாஷியை(மொழிபெயர்ப்பாளர்) துணை கொண்டு சுல்தானை கோயிலைத் திறந்து வழிபாடு செய்ய கேட்ட போது உன் வேண்டுகோளை எனக்கு நேரடியாக சொல்ல கூட தெரியாத உனக்கு ஏதும் உதவ முடியாது என கேலி பேசி அனுப்பினார்.
மனம் வெதும்பிய குமரகுருபரர் வருத்தத்தோடு சரஸ்வதி தேவியை தூய தமிழில் 10 பாடல்கள் சகலகலாவல்லி மாலை என பாடினார். சகலகலாவல்லி மாலை பாடிடஹிந்துஸ்தனி , உருது மொழிகளில் பூர்ண பாண்டித்யம் ஓர் இரவில் சரஸ்வதி தேவியின் அருளால்   பெற்றிட சுல்தானிடம் அவர் மொழியில் பேசிட, அதிசயம் புரிய காசி கோயில் திறக்கப் பட்டது. குமரகுருபரர் வேண்டுகோள்ப்படி அங்கு தமிழகத்திலிருந்து வரும் பக்தர் தங்க காசி மடம் என நிலம் பெற்று நிறுவினார்.
இப்பாடல் படித்து துதிப்போருக்கு கல்வி ஞானம் பெருகும்.
உங்கள் குழந்தை களை இந்த எழிய தமிழில் உள்ள பாடலகளை தினமும் பாடச்செய்தால் கல்வியில் சரஸ்வதி துணை நிச்சயம்.
 
வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்தாமரைக்குத் தகாது கொலோ? சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே!  (1)
 
எல்லாக் கலைகளையும் காத்து அளிப்பவளே! கலைமகளே!! ஏழு உலகங்களையும் காக்கும் தொழில் புரியும் நாராயணன் பிரளயக் காலத்தில் அவற்றைக் காப்பதற்காக அவற்றையெல்லாம் உண்டு தன் வயிற்றில் வைத்துக் காப்பாற்றிப் பின் பாற்கடலில் உறங்கி கொண்டிருக்கஎல்லாவற்றையும் அழிக்கும் தொழில் புரியும் அண்ணல் சிவபெருமான் பித்தனாய் ஊழித் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்க, பிரளயத்தின் முடிவில் மீண்டும் உலகங்களையும் உயிர்களையும் உண்டாக்கும் வண்ணம் பார்த்திருக்கும், படைக்கும் தொழில் புரியும் நான்முகனாம் பிரம்ம தேவன் ஆசையுடன் சுவைக்கும் கரும்பு போன்றவளே!!  நீ வெண்தாமரையில் வீற்றிருக்கிறாய். அதிலேயே இருக்கிறாயே. என் உள்ளமும் வெள்ளை உள்ளம் தானே? அதையும் ஒரு குளிர்ந்த வெண்தாமரை என்றுக் கருதி உன் பாதத்தை அங்கேயும் வைக்கலாகாதா? என் உள்ளத்திற்கு உன் பாதங்களைத் தாங்கும் பாக்கியம் கிடைக்காதா? உனது அருள் எனக்குக் கிடைக்காதா?
 
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே (2)
 
எல்லாக் கலைகளையும் காத்து அருள்பவளே! கலைவாணியே! தாமரை மலர் இருக்கையில் வீற்றிருக்கும் பசும்பொன்னால் செய்யப்பட்டக் கொடி போன்றவளே! பெருத்தக் குன்றினைப் போன்ற கொங்கைகளும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பைப் போல் இனியவளே! நானும் இந்த உலகமும் விரும்பும், பொருட்சுவையும் சொற்சுவையும் தோய்ந்து வரும், நான்கு விதமான கவிதைகளையும் பாடும் பணியில் என்னைப் பணித்தருள்வாய்!
 
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! (3)
 
என்னைக் காத்து அருளும் செழுந்தமிழாகிய தெளிந்த அமுதினை ஆரவாரத்துடன் உண்டு உன் அருளாகிய கடலில் மூழ்கி எழுந்து உட்குடைந்து குளிக்கும் படி என்று நேருமோஉள்ளத்தில் ஆழ்ந்து நினைக்க தெளிவினை அள்ளித் தரும் பாடல்களைப் பாடும் புலவர்கள் கவிதை மழை சிந்த அதனைக் கண்டு மகிழும் அழகிய தோகை கொண்ட மயில் போன்றவளே! சகலகலாவல்லியே! - கலைவாணியே!
 
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! (4)
 
எல்லோரும் பாடிப் பரவும் பாடல்களும், எல்லாத் துறைகளிலும் இயங்கும் கல்வியும், சொல்லும் ஒவ்வொரு சொல்லும் இனிமையுடன் வலிமை பொருந்தி நிற்கும் பேச்சுத்திறமையும், வடதிசையில் வாழ்ந்தவர் இயற்றிய கடல் போன்ற நூல்களும் (வடமொழியில் இருக்கும் கடல் போன்ற நூல்களும்), இன்பத்தையும் அறிவையும் தேக்கி நிற்கும் செழுமையான தமிழ்ச் செல்வங்களான நூல்களும், எனக்கு கிடைத்து நின்று நிலைத்துப் பெருக நீ அருள் புரிவாய்!  தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!
 
பஞ்சு அப்பு இதம் தரும் செய்ய பொற் பாத பங்கேருகம் என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய் சகலகலாவல்லியே (5)
 
நீண்ட அழகிய இதழ்களைக் கொண்ட தாமரையில் அமர்ந்திருக்கும் மென்மை மிகுந்த அன்னப் பறவையை கொடியாக உடைய பிரம்ம தேவனின் செம்மையான திருநாவையும் உள்ளத்தையும், வெள்ளைத் தாமரையாய் செய்த சிம்மாசனமாகக் கொண்டு வீற்றிருந்தாய் சகலகலாவல்லியாகிய கலைவாணியன்னையே! பஞ்சினைப் போல் இனிமைதரும் மென்மையான உன் திருவடித் தாமரைகள் என் நெஞ்சமாகிய நீர்நிலையில் மலராதது என்ன காரணத்தினால்?
 
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே (6)
 
இசையும், ஆடலும், எல்லாவிதமான கலைகளும் கல்விகளும் இனிமையான சொற்கள் நிறைந்து மீண்டும் மீண்டும் (பன்னிப் பன்னிப்) பாடும் படியான பாடல்களும் நான் நினைத்தவுடனே எளிதாய் எய்துமாறு அருளுவாய்! நூலைச் செய்தவர் யாருமே இல்லாத வேதங்களும், வான், மண், நீர், நெருப்பு, காற்று என்னும் ஐம்பூதங்களும் உன் அன்பர் கண்களிலும் கருத்தினிலும் நிறைந்தாயே கலைவாணியே! சகலகலாவல்லியே
 
பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப் பேடே சகலகலாவல்லியே! (7)
 
நல்ல பாடல்களும், அதில் நல்ல பொருளும், அந்த பொருளால் நல்ல நல்ல பயன்களும் என்னிடம் இருந்து உருவாகும் படி உன் கடைக்கண்ணால் பார்த்து அருள் புரிவாய். உள்ளத்தில் உறுதியும் தெளிவும் கொண்டு உன் தொண்டர்கள் தீட்டும் கலைத் தமிழ் தீம்பால் அமுதமானது மற்றவர்கள் எழுதும் சுவையில்லாதவற்றிலிருந்து பிரித்துக் காட்டி தெளிவிக்கும் (பாலினை நீரிலிருந்து பிரித்துக் காட்டும்) வெண்மையான பெண் அன்னமே! எல்லாக் கலைகளையும் அருளும் கலைவாணியே! சகலகலாவல்லியே
 
சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே சகலகலாவல்லியே (8)
 
பேச்சுத் திறமையும் நல்ல கவனமும் கவிதைகளை எண்ணிய போதில் சொல்லவல்ல நல்வித்தையும் அருளி என்னை அடிமை கொள்வாய்.  தாமரையை இருப்பிடமாகக் கொண்டு விளங்கும் செல்வியாம் இலக்குமியின் அருள் அரிதாகப் போய்விட்டதே என்று மனம் வருந்தும் நிலையில்லாமை அருளும் கல்வியெனும் பெரும்செல்வப் பேறே எல்லாக் கலைகளும் வல்லவளே! சகலகலாவல்லியே!
 
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத்தாயே சகலகலாவல்லியே (9)
 
விதைகளிலும் கட்டுரைகளிலும் சொல்லும் சொற்களுக்கும், அவற்றின் பொருட்களுக்கும் உயிராக உள்ளுரைப் பொருளாக இருக்கும் மெய்யான ஞானவடிவாக விளங்குகின்ற உன்னை (எப்போதும்) வணங்குபவர் (என்னையன்றி வேறு) யார்? நிலத்தில் தோயும்படி இருக்கும் நீண்ட தும்பிக்கையுடைய சிறந்த பெண்யானையும் பறவைகளிலேயே அழகில் சிறந்த ராஜஹம்ஸமாகிய அரச அன்னப் பறவையும் வெட்கும் படியான நடையுடைய திருவடித் தாமரைகளை உடையவளே கலைவாணியே!  சகலகலாவல்லியே!
 
மண்கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே! (10)
 
மண்ணுலகில் மன்னர்கள் எல்லாரும் தம் அரசாட்சியின் சின்னமாக வெண்கொற்றக் குடையின் கீழ் சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றனர். சிற்றரசர்களின் வெண்குடைகள் பேரரசர்களின் கீழ் அமைகின்றன. அவ்வாறு மண்ணுலகில் உள்ள எல்லா வெண்குடைகளும் தனக்குக் கீழாக பேரரசனாக விளங்குகின்ற மன்னரும் என் பாடல்களைக் கண்டவுடனே தகுந்த மரியாதை கொடுத்துப் பணியும் படி அருள் செய்வாய். படைக்கும் கடவுளான பிரம்மதேவன் முதற்கொண்டு விண்ணில் வாழும் தெய்வங்கள் பலகோடி இருப்பினும் உன்னைப் போல் கண்கண்ட தெய்வம் உள்ளதோ? சொல்லுவாய் கலைவாணியே! சகலகலாவல்லியே!

No comments:

Post a Comment